ஆந்திராவில் கர்ப்பிணி பெண்ணை தூளியில் வைத்து 8 கி.மீ. சுமந்து சென்ற உறவினர்கள்

ஆந்திராவில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில், மலைவாழ் மக்கள் வசிக்கும் பல பகுதிகளில் இன்னமும் சரிவர சாலை வசதி இல்லை. இதனால், மருத்துவமனை, பள்ளிகளுக்கு செல்ல மலைவாழ் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், தடகபல்லி கிராமத்தை சேர்ந்த மங்கராஜு என்பவரின் மனைவி தாமினி (27) 9 மாத கர்ப்பிணியாக இருந்தார். இவருக்கு கடந்த வியாழக்கிழமை பிரசவ வலி ஏற்பட்டது. இவர்களது கிராமத்தில் இருந்து 8 கி.மீ தூரத்தில் ஆரம்ப சுகாதார மையம் இருக்கும் நிலையில், அங்கு செல்ல முறையான சாலை வசதி கிடையாது. மலைகள், காடுகள், சில குட்டைகளையும் கடந்துதான் அங்கு செல்ல வேண்டும். சமீபத்தில் அந்த பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் நிலைமை மேலும் மோசமாகி இருந்தது.

இதனால் தாமினியை அவரது உறவினர்கள் ஒரு தூளியில் உட்கார வைத்து படுமோசமான அந்த மலைப்பாதையில் 8 கி.மீ தூரம் வரை சுமந்து சென்றனர். சாமகட்டா என்ற இடத்துக்கு சென்ற பிறகு, அங்கிருந்து ஜீப்பில் சிந்தபல்லியில் உள்ள பிராந்திய மருத்துவமனையில் கொண்டு போய் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. தாமினி ஒரு அழகான பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயும், சிசுவும் நலமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தங்கள் கிராமத்தில் இருந்து சாமகட்டா வரை சாலை, மின் விளக்கு வசதிகளை செய்து தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles