ரியாத் விமான நிலையம் மீது ஹுதிகள் தாக்குதல் – 12 பேர் உயிரிழப்பு

ரியாத் சர்வதேச விமான நிலையத்தில் ஹவுதி போராளிகளால் நடத்தப்பட்ட மூன்றாவது சுற்று தாக்குதலில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 300இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக சவூதி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் நான்கு சவூதி நாட்டினர், வங்காளதேசத்தைச் சேர்ந்த இருவர் மற்றும் அமெரிக்கா, ஜோர்டான், பலஸ்தீனம், சிரியா, சூடான், எகிப்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் அடங்குவதாக சவூதி சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் விடயத்தை நன்கறிந்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த தாக்குதல் கடந்த 10 வருடங்களில் சவூதி அரேபியாவில் இடம்பெற்ற மோசமான தாக்குதலாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விமானப் போக்குவரத்தைக் கண்காணிக்கும் ‘Flightradar24’ வலைத்தளத்தின் தரவுகளின்படி, ரியாத்தை நோக்கிய அனைத்து விமானங்களும் மாற்றுப் பாதைகளுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன அல்லது ரத்து செய்யப்பட்டுள்ளன.

சவூதி அரேபியாவின் அச்சுறுத்தல் எச்சரிக்கை அமைப்பு எந்த எச்சரிக்கையும் விடுக்காததால், இந்தத் தாக்குதல் முன்னறிவிப்பின்றி நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles