பலஸ்தீனத்தில் தேர்தல் ஒத்திவைப்பு: பிரான்ஸ், ஆஸ்திரேலியா எதிர்ப்பு

பலஸ்தீன அதிகாரசபை (PA) பொதுத் தேர்தலை ஒத்திவைக்க எடுத்துள்ள முடிவு மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை அமைச்சர் பென்னி வோங் தெரிவித்துள்ளார்.

அதேவேளையில், பலஸ்தீனத்தை தனி நாடாக லேபர் அரசு அவசரப்பட்டு அங்கீகரித்துவிட்டதாகக் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குற்றம் சாட்டியுள்ளது.

பலஸ்தீனத்தில் வரும் நவம்பர் மாதம் நடைபெறவிருந்த பொதுத் தேர்தலை மாறுபட்ட சூழ்நிலைகளைக் காரணம் காட்டி, 2027 செப்ரெம்பர் வரை ஒத்திவைப்பதாக ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் சனிக்கிழமை அறிவித்தார். இது கடந்த 20 ஆண்டுகளில் நடைபெறவிருந்த முதல் தேர்தலாகும்.

இது குறித்துப் பேசிய அமைச்சர் பென்னி வோங்,

“காலதாமதமின்றி தேர்தலை நடத்துவதை பலஸ்தீன அதிகாரசபை உறுதி செய்ய வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.

சீர்திருத்தம், ஜனநாயக புதுப்பித்தல் மற்றும் பொறுப்புள்ள ஆட்சிமுறை குறித்து சர்வதேச சமூகத்திற்கு பலஸ்தீன அதிகாரசபை அளித்த வாக்குறுதியில், நம்பகமான தேர்தல்களை நடத்துவது ஒரு முக்கிய அங்கமாகும்.

தேர்தலைத் தொடர்ந்து ஒத்திவைப்பது இரு-நாடு தீர்வுக்கான சாத்தியக்கூறுகளைச் சீர்குலைக்கும்” என்று கூறினார்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேல் தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்கள், காசா மீதான தாக்குதல்கள் மற்றும் தேர்தல் பொருட்கள் அல்லது சர்வதேச பார்வையாளர்கள் காசாவிற்குள் நுழைய இஸ்ரேல் மறுப்பது ஆகியவையே தேர்தல் ஒத்திவைக்கப்பட முதன்மை காரணங்கள் என்று பலஸ்தீன விடுதலை அமைப்பின் (PLO) செயற்குழு தெரிவித்துள்ளது.

அதேவேளை, இரண்டு தசாப்தங்களில் முதல்முறையாக பலஸ்தீன மக்கள் ஜனநாயக முறையில் தங்களை வெளிப்படுத்திக் கொள்ளும் உரிமையைப் பறிக்கும் இந்தத் தேர்தல் ஒத்திவைப்பு முடிவை பலஸ்தீன அதிகாரசபை திரும்பப் பெற வேண்டும் என்று பிரான்ஸ் அரசும் வலியுறுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles