ஜம்மு – காஷ்மீர் குகையில் பதுக்கப்பட்டிருந்த ஆயுதங்கள் மீட்பு

ஜம்மு – காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டம், சோபூர் அருகே உள்ள முகாம் செர்ஹார் காட்டில் ஓர் இயற்கையான மலைக் குகையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பெருமளவு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் வெடிபொருட்களை காவல் துறையினர் மீட்டுள்னர்.

புலனாய்வுத் தகவலின் அடிப்படையில், போமை பகுதியில் உள்ள முகாம் செர்ஹார் வனப்பகுதியில் காவல் துறை நேற்று தேடுதல் நடத்தியது.

அங்கிருந்த இயற்கைக் குகையில், ஒரு பெரிய பாறைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நீல நிற பிளாஸ்டிக் பீப்பாயும் ஒரு பையும் கிடைத்தன. அவற்றைப் பாதுகாப்பாகக் கையாள வெடிகுண்டு செயலிழப்புப் படை வரவழைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட ஆயுதங்களில் ஒரு மல்டி கிரனேட் லோஞ்சர், இரண்டு ஏ.கே. ரக துப்பாக்கிகள், கைத்துப் பாக்கிகள், 11 கையெறி குண்டுகள், ரிமோட் மூலம் இயக்கக் கூடிய இரண்டு ஐ.இ.டி. வெடிகுண்டுகள் அடங்கும்.

எட்டு டெட்டனேட்டர்கள், இரண்டு ரைமர்கள், வை-எஸ்எம்எஸ் கருவி, பிரைமா கார்டுகள், மின்கம்பிகள், பற்றரி செல்கள் போன்ற வெடிகுண்டு தயாரிக்கவோ வெடிக்கச் செய்யவோ பயன்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த ஆயுதங்களும் வெடிபொருட்களும் எங்கிருந்து வந்தன, எதற்காக பதுக்கி வைக்கப்பட்டன என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

குறிப்பாக இவை ஏதேனும் திட்டமிடப்பட்ட தீவிரவாதச் செயலுடன் தொடர்புடையவையா என்பது குறித்து தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles