நைஜீரியாவின் வடகிழக்கு மாநிலமான போர்னோவில் உள்ள ராணுவத் தளம் ஒன்றின் மீது, போகோ ஹராம் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
15 இராணுவத்தினரும், 5 அரச ஆதரவு ஆயுதக்குழு உறுப்பினர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
அத்துடன் இந்த தாக்குதல் சம்பவத்தில் இராணுவ வாகனங்கள் அழிக்கப்பட்டதுடன், அருகில் உள்ள கிராமம் ஒன்றுக்கும் தீவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
ராணுவ செய்தித் தொடர்பாளர் கேப்டன் முகமது கோனி, இந்தத் தாக்குதல் குறித்த கருத்து கோரிய அழைப்புகளுக்கோ அல்லது செய்திகளுக்கோ பதிலளிக்கவில்லை என ரொய்டர்ஸ் குறிப்பிட்டுள்ளது.
ராணுவத் தளத்தின் மீதான தாக்குதலுக்கு முன்னதாக, அந்தத் தீவிரவாதிகள் தும்புன் பாரேபாரி Tumbun Barebari என்ற ஏரிக்கரை கிராமத்தில் 40 இற்கும் மேற்பட்ட மீன்பிடிப் படகுகளைக் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
