மலேசியாவின் பேராக், சித்தியவான் Kampung Kohவில் இரண்டு இரு மாடி வீடுகளில் பரவிய தீயில் சிக்கி இரு சகோதரிகள் உயிரிழந்தனர். 15 மற்றும் 18 வயதான அவ்விரு சகோதரிகளும் வீட்டினுள் சிக்கிக் கொண்டனர் என பேராக் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை இயக்குநர் தெரிவித்தார்.
காலை 9.01 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததை அடுத்து சித்தியவான் மற்றும் Seri Manjung நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டனர். Pantai Remis தன்னார்வத் தீயணைப்புப் படையினரும் உதவினர் அவர் கூறினார்.
தீ விபத்தில் மூன்று கார்கள், ஒரு மோட்டார் சைக்கிள் ஆகியவையும் தீக்கிரையாகின. காலை 10.30 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில், தீயை முழுமையாக அணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்படுகிறது. உயிரிழந்த இரு சகோதரிகளின் உடல்களும் மேல்நடவடிக்கைகளுக்காகக் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
