அமரர் கண்ணையா சீதேவி
இறப்பு – 17 MAR 2013
புங்குடுதீவு 2ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கனடா, Canada
புங்குடுதீவு 2ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும்,தற்போது கனடாவில் வசித்து வந்தவருமாகிய கண்ணையா சீதேவி அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கே
நீங்கள் எங்கே சென்றீர்கள் அம்மா!
உங்கள் பசுமையான நினைவுகளை
எங்களால் மறக்க முடியவில்லை அம்மா
உங்களை இழந்ததால் எங்கள்
வாழ்க்கையே திசை மாறிவிட்டதம்மா
அம்மாவுன் மடியில் வாழ்ந்த
அந்நாட்கள் போல வருமா
இம்மா உலகம் ஆளும்
இன்பமும் இன்பம் தருமா
சும்மாவா சொன்னார் தாய்மடி
சொர்க்கம் என்று
ஆண்டுகள் எத்தனை போனாலும்
பாசப் பிணைப்பினாலா
நாம் பலரும் தவிக்கின்றோம்
இல்லத்தின் சுடரொளியாய்
வையத்தில் வாழ்ந்த
உங்கள் அன்புள்ள ஆத்மாவின்
சாந்திக்காய் வேண்டுகின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்