Sangathy
News

இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் மீது லாஹூரில் தாக்குதல் நடத்திய பிரதான சந்தேகநபர் சுட்டுக் கொலை

Colombo (News 1st) 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களை இலக்கு வைத்து, பாகிஸ்தானின் லாஹூரில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய குழுவின் பிரதான சந்தேகநபர் அந்நாட்டு பொலிஸாரால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள தேரா ஸ்மைல் கான் நகரில்,  பாகிஸ்தான் பொலிஸாருடன் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இக்பால் அல்லது பாலி கயாரா என அழைக்கப்படும் ஒருவரே கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உயிரிழந்தவர் பாகிஸ்தானிலுள்ள தலிபான் அமைப்பின் துணை பிரிவுடன் தொடர்புபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இக்பால் அல்லது பாலி கயாரா 206 பயங்கரவாத தாக்குதல்கள்,  பல்வேறு கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் 2009 ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலுக்கு மேலதிகமாக, அண்மையில் பாகிஸ்தானின் வைத்தியசாலையொன்றின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் பிரதான சந்தேகநபர் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

Related posts

Measles raises its head again: Health Ministry all out to eradicate it

John David

அநுராதபுரம் குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு; விசாரணைக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

John David

உயர் தர பரீட்சைக்கு முன்னதாக வினாத்தாள் வௌியான விவகாரம்: ஆசிரியர் ஒருவருக்கு விளக்கமறியல்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy