Sangathy
News

அநுராதபுரம் குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட இளைஞர் உயிரிழப்பு; விசாரணைக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் நியமனம்

Colombo (News 1st) அநுராதபுரம் குற்ற விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் உயிரிழந்தமை தொடர்பிலான விசாரணைகளுக்கு உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டுள்ளனரா என்பது தொடர்பில் பிரேத பரிசோதனை அறிக்கையினூடாக தெரியவரும் என பிரதேசத்திற்கு பொறுப்பான உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

நேற்றிரவு முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், 80 கிராம் ஹெரோயினுடன் நால்வர் கைது செய்யப்பட்டனர்.

சந்தேகநபர்களில் ஒருவர், அநுராதபுரம் பொலிஸ் சிறைக்கூடத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, திடீர் சுகவீனமுற்ற நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும், சிகிச்சை பலனின்றி 22 வயதான சந்தேகநபர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் நீண்டகாலமாக போதைபொருளுக்கு அடிமையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

India’s GDP growth is on course to print close to 7 percent this year in 2022-23, foreign brokerage, JP Morgan said in a report

Lincoln

Diruni Chanmugam appointed WISTA Sri Lanka President

Lincoln

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படும்: மின் பாவனையாளர்கள் சங்கம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy