அமரர் தவமணி யாதவராயன்
பிறப்பு15 JUN 1950, இறப்பு02 JUN 2015
வயது 64
நெடுந்தீவு கிழக்கு, Sri Lanka (பிறந்த இடம்) உருத்திரபுரம், Sri Lanka பாண்டியன்குளம், Sri Lanka
யாழ். நெடுந்தீவு கிழக்கைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், முல்லைத்தீவு பாண்டியன்குளம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த தவமணி யாதவராயன் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது…
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!
வாழ்ந்த நாட்களை வசந்தமாக்கிச் சென்ற
எம் தெய்வத்தின் இழப்பு உறவுகளையும்
எம் உள்ளத்தையும் விழியோரம்
நீர் சொரிய வைக்கின்றதேயம்மா…
ஆண்டு எட்டு நொந்து நொந்துதான் கரைய
எங்கள் கண்ணோர விழி நீரும்
இன்னும் காயாமல் போகின்றதே
அம்மா அம்மா என்று அழைக்கின்றோம்!
அம்மா அம்மா என்று அழுகின்றோம்!
எங்கே சென்றீர்கள்? எங்கே மறைந்தீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்