Sangathy
News

கோஸ்டாரிகா மிருகக்காட்சி சாலையில் பிற உயிரின் உதவியின்றி கருவுற்ற முதலை

Costa Rica: கோஸ்டாரிகாவில் உள்ள மிருகக்காட்சி சாலையில் சுமார் 16 ஆண்டுகள் தனிமையில் வாழ்ந்து வந்த பெண் முதலை ஒன்று முட்டைகளை இட்டு கருவுற்றிருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

16 ஆண்டுகளாக தனிமையில் பராமரிக்கப்பட்டு வந்த முதலை தானே இனப்பெருக்கம் செய்யும் இந்த செயல்முறையை கன்னி பிறப்பு  (virgin birth) என்று விலங்கியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்த கன்னிப் பிறப்பு தன்மை கொண்ட விலங்குகள், அவற்றின் சொந்த மரபணுப் பொருளை இணைக்கும் திறன் பெற்றவை என்றும், இதன் மூலம் கன்னிப் பிறப்பு நிகழ்வதாகவும் ஆராய்ச்சி மூலம் தெரியவந்துள்ளது.

டைனோசர்ஸ் போன்ற உயிரினங்களுக்கு பிறகு தற்போது பெண் முதலை ஒன்று தானாகவே முட்டையிட்டுள்ளது குறித்து விலங்கியல் வல்லுநர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

மருத்துவத்துறையில், பிற உயிரின் பாலியல் ரீதியான உதவியின்றி தானாகவே கர்ப்பமாகும் முறை Facultative Parthenogenesis எனப்படுகிறது.

இந்த முறையில் சில பறவைகள், பல்லி, மற்றும் பாம்பு வகைகள் கருவுற்று புதிய உயிரினங்களை தோற்றுவிப்பதாக அறிவியல் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். எனினும், முதலை பிற உயிரின் எந்த உதவியுமின்றி முட்டையிட்டுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த விர்ஜினா தொழில்நுட்ப நிறுவனத்தில் ஆமைகள், முதலைகளின் கருவுறுதல் முறை குறித்து ஆராய்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்த உயிரினங்களில் போதுமான அளவு பாலியல் குரோமோசோம்கள் இல்லை என்றும், அவற்றின் பாலியல் தேவைக்கான தீர்வை உடலின் வெப்பம் மூலம் கட்டுப்படுத்துவதாகவும், அதில் முட்டையிட்டு குஞ்சுபொறிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் விளக்குகின்றனர்.

பிற உயிரின் உதவியின்றி கருவுற்ற முதலை குறித்து ஆராய்ச்சி நடத்தி, Biology Letters மாத இதழில் வெளியிடப்பட்டது.

இந்த ஆராய்ச்சி 2018 ஆம் ஆண்டு முதல் கடந்த 16 ஆண்டுகளாக தனித்து வைக்கப்பட்டுள்ள முதலை கருவுற்றதை அடிப்படையாக வைத்து தொடங்கப்பட்டது.

ஆராய்ச்சியாளர்களின் தரவுகளின் படி, இந்த அறிக்கையே எந்த உயிரின் உதவியின்றி கருவுற்ற முதலை குறித்த முதல் ஆவணம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

தமிழக முதல்வர் டெல்லி பயணம் – மோடியைச் சந்திப்பாரா?

Lincoln

Ishan Kishan likely to open in Shubman Gill’s absence

Lincoln

தொழில் முனைவோருக்கு 2 வீத வட்டியில் கடன் – பிரசன்ன ரணவீர

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy