Sangathy
News

நைஜீரியாவில் படகு விபத்தில் 106 பேர் பலி; திருமண நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிய போது அனர்த்தம்

Nigeria: நைஜீரியாவில் இடம்பெற்ற படகு விபத்தில் 106 பேர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காணாமற்போயுள்ளனர்.

நைஜீரியாவின் நைஜா் மாகாணம், Gboti-யில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் Kwara மாகாணத்தின் Patigi எனும் பகுதிக்கு திரும்பிச் சென்றுகொண்டிருந்த போது, அனர்த்தத்தில் சிக்கியுள்ளனர்.

அவர்கள் நைஜா் நதி வழியாக படகு மூலம் திங்கள் கிழமை தமது ஊா்களுக்கு திரும்பிக்கொண்டிருந்த போது, விபத்து இடம்பெற்றுள்ளது.

வாகனங்களில் பயணித்தவர்கள் கூட, கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால், வீதிகள் மூழ்கியதையடுத்து, படகில் ஏறி பயணித்துள்ளனர்.

படகில் அளவிற்கு அதிகமாக சுமாா் 300 போ் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது.

Patigi அருகில் படகு பயணித்துக்கொண்டிருந்த போது இரண்டாக உடைந்து ஆற்றினுள் மூழ்கியுள்ளது.

இதைக் கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக விரைந்து செயற்பட்டு, நீரில் தத்தளித்தவா்களை மீட்டுள்ளனா். பின்னா் மீட்புக் குழுவினரும் அங்கு சென்று மீட்புப் பணிகளில் ஈடுபட்டனா். இதன்போது, 144 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

காணாமல் போனவர்களைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

எனினும், நேற்றைய நிலவரப்படி, இந்த விபத்தில் 106 போ் பலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலியானவா்களில் ஏராளமான சிறுவா்களும் அடங்குவா்.

நைஜீரியாவில் நீா் வழிப் போக்குவரத்திற்கு உள்ளூரில் தரமில்லாமல் தயாரிக்கப்படும் படகுகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதனால் அங்குள்ள தொலைதூரப் பகுதிகளில் படகு விபத்துகளும் உயிரிழப்புகளும் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன.

Related posts

High out-of-pocket expenditure seen as affecting healthcare access of local households

John David

ரஷ்யா முன்வைத்த இஸ்ரேல், ஹமாஸ் போர் நிறுத்த பிரேரணை நிராகரிப்பு

John David

As crisis worsens, tots drop out of preschools

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy