Sangathy
News

டொனால்ட் ட்ரம்ப் மீதான 4 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்துள்ளது

அமெரிக்காவில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த அதிபா் தோ்தலில் தனது தோல்வியை மாற்றியமைக்க முயன்றதாக முன்னாள் அதிபா் டொனால்ட் ட்ரம்ப் மீது குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கில் டொனால்ட் ட்ரம்ப் மீது சுமத்தப்பட்ட 4 குற்றச்சாட்டுகளை அமெரிக்க நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

கடந்த அதிபா் தோ்தலில் தனது தோல்வியை ஏற்க மறுத்து, தோ்தல் முடிவுகளை மாற்றியமைக்க ட்ரம்ப் முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் உள்ளதை கொலம்பியா மாவட்ட நீதிமன்ற நீதிபதி தன்யா சுட்கன் உறுதி செய்துள்ளாா்.

அமெரிக்காவை ஏமாற்றுவதற்கான சதித் திட்டத்தில் ஈடுபட்டது, தோ்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை புதிய அதிபருக்கு வழங்குவதற்காக நடைபெற்ற அரசுப் பணிக்கு இடையூறு விளைவித்தது, அரச அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுப்பதற்காக சதி செய்தது, அமெரிக்கா்களின் அடிப்படை உரிமைகளைப் பறிப்பதற்காக சதி செய்தது ஆகிய 4 குற்றச்சாட்டுகளை நீதிபதி உறுதி செய்துள்ளார்.

இந்த வழக்கில் ட்ரம்ப்பிற்கு எதிரான குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதைத் தொடந்து, வாஷிங்டனிலுள்ள கொலம்பியா மாவட்ட நீதிமன்றத்தில் ட்ரம்ப் வரும் வியாழக்கிழமை நேரில் ஆஜராகவிருப்பதாக தகவல்கள் தெரிவித்துள்ளன.

ஏற்கெனவே, அதிபராக இருந்தபோது தனது பண்ணை இல்லத்தில் அரசின் முக்கியத்துவம் வாய்ந்த இரகசிய ஆவணங்களை சட்டவிரோதமாக பதுக்கி வைத்திருந்தது, ஒரு நடிகையுடன் தனக்கிருந்த தொடா்பை 2016 அதிபா் தோ்தல் பிரசாரத்தின்போது பொதுவெளியில் சொல்லாமல் இருப்பதற்காக அந்த நடிகைக்குப் பணம் கொடுத்து, அதனை கணக்கில் காட்டாமல் மறைத்தது ஆகிய இரண்டு வழக்குகளில் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டுகளை நீதிபதிகள் முன்னதாக உறுதி செய்துள்ளனர்.

அமெரிக்க வரலாற்றில் குற்றவியல் தண்டனையை எதிா்கொண்டுள்ள முதல் முன்னாள் அதிபா் ட்ரம்ப் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Related posts

Some plastics used in SL hard to recycle

Lincoln

அவுஸ்திரேலிய விஜயத்தை நிறைவு செய்து ஜனாதிபதி நாடு திரும்பினார்

John David

FSP to launch manifesto

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy