Sangathy
News

ஜப்பான் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உரம் விவசாயிகளுக்கு பகிர்ந்தளிப்பு

Colombo (News 1st) ஐக்கிய நாடுகளின் உணவு, விவசாய அமைப்பின் நன்கொடையின் கீழ் ஜப்பான் அரசாங்கத்தினால்  நாட்டிற்கு வழங்கப்பட்ட உரம் சில பகுதிகளிலுள்ள விவசாயிகளுக்கு இன்று பகிர்ந்தளிக்கப்பட்டது.

பெரும்போக விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், ஒரு ஹெக்டேருக்கு 50 கிலோகிராம் வீதம் விவசாயிகளுக்கு உரம் விநியோகிக்கப்பட்டது.

இதன் பிரதான நிகழ்வு, யாழ். சாவகச்சேரி கமநல சேவை நிலையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில்  இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் MIZUKOSHI Hideaki உணவு ,விவசாய அமைப்பின் இலங்கை- மாலைத்தீவிற்கான வதிவட பிரதிநிதி விஜேந்திர சரண், வட மாகாண ஆளுனர் P.S.M. சார்ள்ஸ், யாழ். மாவட்ட கமநல சேவைகள் பிரதி ஆணையாளர்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது,  2.5 ஏக்கருக்கு குறைந்த நிலப்பரப்பில் விவசாயத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு உரம் பகிர்ந்தளிக்கப்பட்டது.

இதனிடையே, கிளிநொச்சி கமநல சேவை நிலையத்திலும் விவசாயிகளுக்கு உரம் வழங்கி வைக்கப்பட்டது.

கிளிநொச்சி – கிருஸ்ணபுரம் கமக்காரர் அமைப்பிலுள்ள 80 விவசாயிகளுக்கு இதன்போது உரம் விநியோகிக்கப்பட்டது.

Related posts

அமரர் சுசிலா சுதாகரன்

Lincoln

Modernization of the agriculture sector is a priority for the Government – President

Lincoln

இன்றைய வானிலை எதிர்வுகூறல்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy