Sangathy
News

நிலவில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய Luna-25 விண்கலத்தை ஏவியது ரஷ்யா

Russia: ரஷ்யா உருவாக்கிய Luna-25 என்ற விண்கலம் இன்று (11) விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்த விண்கலம் 5 நாட்கள் பயணம் செய்து நிலவின் சுற்றுவட்டப் பாதையை அடையும் என்றும், பின்னர் 5 முதல் 7 நாட்கள் சுற்றுவட்டப் பாதையில் பயணம் செய்து நிலவில் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும் அதே நாளில் ரஷ்யாவின்  Luna-25 விண்கலமும் தரையிறங்குகிறது.
இதற்காக மூன்று இடங்களை ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவு செய்துள்ளனர்.

ரஷ்யா கடந்த 1976-ம் ஆண்டு முதல்முதலாக நிலவுக்கு விண்கலத்தை அனுப்பியது. அதன் பின் 47 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விண்கலத்தை அனுப்பியுள்ளது.

நிலவில் மாதிரிகளை சேகரித்து நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என்று Luna-25  ஆய்வு செய்யும் என்றும் 2021 ஆம் ஆண்டே இந்த விண்கலத்தை ஏவ திட்டமிட்டு, பல்வேறு காரணங்களால் தாமதம் ஏற்பட்டதாகவும் ரஷ்ய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

H One Sri Lanka Partners with Dhiraagu to Offer Microsoft Solutions to the Maldivian Market

Lincoln

மீன்பிடிக்க செல்ல வேண்டாம்: மீனவர்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல்

John David

கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிப்பு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy