Sangathy
News

திராவிட முன்னேற்றக் கழகமே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதாக இந்திய பிரதமர் குற்றச்சாட்டு

Colombo (News 1st) தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட முன்னேற்றக் கழகமே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்திய மக்களவையின் நேற்றைய விவாதத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே பிரதமர் மோடி இதனை கூறியுள்ளார்.

தமிழகத்தை ஆண்ட திராவிட முன்னேற்றக் கழகமே கச்சத்தீவை இலங்கைக்கு வழங்கியதாகவும் அவ்வாறு வழங்கியதன் பின்னர், கச்சத்தீவை மீளப்பெற்றுக்கொள்ள வேண்டும் என தொடர்ந்து தனக்கு கடிதம் எழுதி வருவதாகவும் பாரத பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலப்பகுதியிலேயே இந்த சம்பவம் நடந்தேறியதாக பிரதமர் நரேந்திர மோடி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாகவே 1962 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமிழகத்தில் காங்கிரஸால் வெற்றியீட்ட  முடியவில்லை எனவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் நேற்று (10) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்ட போது கூறியுள்ளார்.

Related posts

சீன ஆய்வுக் கப்பலை அனுமதிக்க வேண்டாம்: இலங்கை, மாலைத்தீவிடம் இந்தியா கோரிக்கை

John David

Private bus operators threaten strike from Tuesday

Lincoln

Remarkable achievement by 14-year-old at Asian Cross Country trial

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy