Sangathy
News

ஊழியர் சேமலாப நிதி தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

Colombo (News 1st) உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது ஊழியர் சேமலாப நிதி தொடர்பில் கிடைக்கப்பெறும் அனுகூலங்கள் குறைக்கப்படுவதினால் ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பின் போது, அரசாங்க பிணையங்களில் முதலீடு செய்யும் போது அதற்காக செலுத்தப்படும் வட்டியை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

வழங்கப்பட்ட அனைத்து பத்திரங்களையும் மீண்டும் வழங்குவதன் மூலம், 2025 வரை 12% வட்டியும், அதன் பிறகு 9% வட்டியும் வழங்கப்படவுள்ளது.

இந்த தீர்மானத்தின் ஊடாக உறுப்பினர்கள் மற்றும் ஊழியர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக குறிப்பிட்டு தீர்ப்பளிக்குமாறு கோரி ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவரும், நிதி ஆய்வாளருமான சதுரங்க அபேசிங்க இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இது தொடர்பில் ஆராய்ந்த, விஜித் மலல்கொட, காமினி அமரசேகர மற்றும் ஜனக் டி சில்வா ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் மனுவை நிராகரித்து உத்தரவிட்டுள்ளது.

Related posts

Minorities under attack as PM Imran Khan pushes ‘tolerant’ Pakistan

Lincoln

Ananda win Western Province Under 20 Inter School Rugby 7s title

Lincoln

Kandy Falcons defeat Galle Gladiators by 5 wickets

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy