Sangathy
News

லிபியாவை தாக்கிய ​டேனியல் புயலால் 2000 பேர் பலி; ஆயிரக்கணக்கானோரை காணவில்லை

Libya: லிபியாவை தாக்கிய ​டேனியல் புயல் காரணமாக 2000 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன், ஆயிரக்கணக்கானோர் காணாமற்போயுள்ளனர்.

வடகிழக்கு லிபியாவில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது.

தெற்கு ஆப்பிரிக்காவின் மத்திய தரைக்கடல் பகுதியில் அமைந்துள்ள லிபியாவில் உள்நாட்டுப் போர் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், லிபியாவை தாக்கிய டேனியல் புயலால் அந்நாட்டின் Derna,  Misrata, Shahhat உள்ளிட்ட பல பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.

இதனால், பலர் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

புயல், கனமழை வெள்ளப்பெருக்கில் சிக்கி இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வெள்ளப்பெருக்கில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் காணாமல் போயுள்ளதுடன், பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.

வெள்ளம் பாதித்த Derna நகரை பேரழிவு மண்டலமாக அந்நாட்டுப் பிரதமர் ஒசாமா ஹமாட் (Ossama Hamad) அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கொடிகளை அரைக்கம்பத்தில் பறக்க விடவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

BASL asks Prez to appoint clean cop as IGP

Lincoln

மாத்தறை Ace Power மின்னுற்பத்தி நிலையத்திடமிருந்து 23 மெகாவாட் மின்சாரம் கொள்வனவு – மின்சார சபை

Lincoln

யாழ்ப்பாணம் – காங்கேசன்துறை பிரதான வீதியில் உள்ள பழக்கடையில் இருந்தவர்கள் மீது வாள்வெட்டு தாக்குதல்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy