அமரர் நாகேந்திரம் மகாலட்சுமி
பிறப்பு14 JAN 1940, இறப்பு13 SEP 2020
வயது 80
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) லியோன், France சுவிஸ், Switzerland இலங்கை, Sri Lanka
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Lyon, சுவிஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேந்திரம் மகாலட்சுமி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
மூன்றாண்டு ஆனதம்மா- உங்கள்
முகம் பாராமல் தவிக்கின்றோம் அம்மா!
ஆண்டு பல ஆனாலும்
எம் வம்சம் உள்ள வரை
உன் நினைவுகள் எப்பொழுதும்
எம் மகத்தில் வாழுமம்மா!!!!
நீ மறைந்த நாளை நினைவேந்தும் வேளை
வாழ்ந்து சென்ற எமது வாழ்க்கையை
எப்படி நெஞ்சம் மறக்குதம்மா!
இனி வர மாட்டீர்கள் எனத் தெரிந்தும் கூட
எப்போ வருவீர்கள் என ஏங்கும் மனதில்
எப்போது உறைக்கப் போகுது
“இல்லை” எனும் உண்மை…?
அம்மா நேற்றுப் போல் உள்ளது
உங்கள் பிரிவால் மனம் வாடித் தவிக்கும்
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள் மற்றும் குடும்பத்தினர்.
தகவல்: புருசோத்-சுபா, சுஜி-சபி