அமரர் ஏகாம்பரம் செல்லப்பா
மண்ணில்28 OCT 1942, விண்ணில்14 SEP 2021
வயது 78
புலோலி தெற்கு, Sri Lanka (பிறந்த இடம்) புலோலி, Sri Lanka
யாழ். புலோலி தெற்கு காந்தியூரைப் பிறப்பிடமாகவும், புலோலி மந்திகையை வதிவிடமாகவும் கொண்டிருந்த ஏகாம்பரம் செல்லப்பா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எம்மை விட்டு பிரிந்து
இரண்டு ஆண்டுகள் ஆன போதும்
உமை நாங்கள் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல் தவிக்கின்றோம்- அப்பா
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே…
நீங்கள் எங்களோடு வாழ்ந்த
காலமெல்லாம் பொற்காலம் – நீவீர்
பிரிந்த காலமெல்லாம் எம் கண்களில்
நீர்க்கோலம்
இன்று நம் கண்ணீர் நிறைந்த
கண்கள் உம்மை தேட
எம் மனமோ உங்களின்
அன்புக்காய் ஏங்கித் தவிக்கிறதே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்: குடும்பத்தினர்