Sangathy
News

கொக்குத்தொடுவாயில் 9 ஆவது நாளாக அகழ்வு; இதுவரை 14 எலும்புக்கூடுகள் மீட்பு

Colombo (News 1st) முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 9 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றன.

முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நேற்று (14) முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது 5 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன.

அத்துடன், துப்பாக்கி ரவை ஒன்றும் ஆடைகள் சிலவும் அங்கிருந்து மீட்கப்பட்டன.

கடந்த 6 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை 14
எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன.

அவை, முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியாசாலையில் வைக்கப்பட்டுள்ளன.

எலும்புக்கூடுகள் தொடர்பாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு சட்டவைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் நிபுணர்களின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி  கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார்.

முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்கான அகழ்வினை மேற்கொண்ட போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

Boos greet Prez at Colombo Law Faculty

Lincoln

Australian woman had brain scan after being choked by Danushka – ABC News

Lincoln

இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வரவுள்ளார்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy