இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக ஸ்ரீ சந்தோஷ் ஜா பரிந்துரைக்கப்பட்டுள்ளார்
Colombo (News 1st) இலங்கைக்கான புதிய இந்திய உயர்ஸ்தானிகராக, அந்நாட்டின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஸ்ரீ சந்தோஷ் ஜாவின் (Shri Santosh Jha) பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக தற்போது செயற்படும் கோபால் பாக்லே, அவுஸ்திரேலியாவிற்கான இந்திய உயர்ஸ்தானிகராக பெயரிடப்பட்டுள்ளார்.
இந்தியாவின் சிரேஷ்ட இராஜதந்திரியான ஸ்ரீ சந்தோஷ் ஜா (Shri Santosh Jha), தற்போது பெல்ஜியத்திற்கான இந்திய தூதுவராகக் கடமையாற்றுகின்றார்.
அவர் விரைவில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.