3 கோடி ரூபா பெறுமதியான தங்க ஆபரணங்கள் கடத்தல்; பெண்கள் இருவர் கைது
Colombo (News 1st) மூன்று கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய தங்க ஆபரணங்களை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டுவந்த இரண்டு பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவேறு சந்தர்ப்பங்களில் குறித்த சந்தேகநபர்கள் 2.2 கிலோகிராம் நிறையுடைய தங்கத்தை நாட்டிற்கு கொண்டுவர முயற்சித்துள்ளனர்.
26 மற்றும் 34 வயதான இரண்டு பெண்களே இவ்வாறு பயணப்பையிலும், உடலிலும் மறைத்து தங்கத்தை நாட்டிற்கு கடத்தியுள்ளனர்.