Sangathy

Sangathy

விக்டோரியா வனப்பகுதியிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

Colombo (News 1st) கண்டி – பதியபெலெல்ல வீதியின் 16 ஆவது கட்டைக்கு அருகிலுள்ள விக்டோரியா வனப்பகுதியிலிருந்து வெடிபொருட்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன.

இந்த வெடிபொருட்களில் கறை படிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

119 என்ற இலக்கத்தின் ஊடாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருட்கள் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் தலாத்துஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

%d bloggers like this: