Sangathy

Sangathy

சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி

Colombo (News 1st) மேலும் சில சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பதில் செயலாளரின் கையொப்பத்துடன் இந்த அதிவிசேட வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய, மின் விநியோகம் சார்ந்த அனைத்து சேவைகள், பெட்ரோலியம், எரிபொருள் உற்பத்தி மற்றும் விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் வைத்தியசாலைகள், சிகிச்சை நிலையங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய நிறுவனங்களின் அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அந்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

%d bloggers like this: