Sangathy

Sangathy

தடுப்புக்காவலில் இருந்த போது ‘ஹரக்கட்டா’ தப்பிச்செல்ல முயன்றமை தொடர்பில் கூட்டு விசாரணை – பொலிஸ்

Colombo (News 1st) நதுன் சிந்தக எனப்படும் ‘ஹரக்கட்டா’ தடுப்புக் காவலில் இருந்த போது தப்பிச்செல்ல முயன்ற சம்பவம் தொடர்பில் கூட்டு விசாரணை இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

ஹரக்கட்டா தொடர்ந்தும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் குறிப்பிட்டார்.

Leave a Reply

%d bloggers like this: