Sangathy

Sangathy

உத்திக பிரேமரத்ன மீது துப்பாக்கிச்சூடு: புலனாய்வுப் பிரிவினரின் உதவியை நாடவுள்ள பொலிஸார்

Colombo (News 1st) பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் காண பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரின் உதவியை நாடவுள்ளதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு இன்று அறிவித்துள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பான விடயங்களை அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ முன்னிலையில் சமர்ப்பித்து, பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்து, துப்பாக்கிச்சூட்டுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியுடன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு நீதவான் இதன்போது உத்தரவிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் உத்திக பிரேமரத்னவின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்டிருந்த பாதுகாப்புப் பிரிவின் இரு அதிகாரிகளிடம் வாக்குமூலம் பெற்றுள்ளதாகவும் பொலிஸார் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளனர்.

Leave a Reply

%d bloggers like this: