Sangathy

Sangathy

மன்னாரின் பல பகுதிகளில் நாளை (20) நீர் வெட்டு

 

Colombo (News 1st) மன்னார் மாவட்டத்தில் நாளை (20) புதன்கிழமை 9 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.

நீர் விநியோகக் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர திருத்தப் பணிகள் காரணமாக நாளை காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

முருங்கன், மன்னார் நகர், பள்ளிமுனை, எழுத்தூர், வங்காலை, அடம்பன் ஆகிய பகுதிகளிலும் அவற்றை அண்மித்த பகுதிகளிலும், தோட்டவெளி, சிறுத்தோப்பு, எருக்கலம்பிட்டி, திருக்கேதீஸ்வரம், நாகதாழ்வு ஆகிய பகுதிகளிலும் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளது.

குறித்த பகுதிகளில் வசிப்போர் நீரை முற்கூட்டியே சேமித்து சிக்கனமாக பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலதிக விபரங்களுக்கு 1939-க்கு அழைக்குமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

%d bloggers like this: