Colombo (News 1st) நாட்டின் பல பகுதிகளில் இன்று(19) 50 மில்லிமீட்டருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
கிழக்கு, மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, பதுளை மாவட்டத்திற்குட்பட்ட சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.
பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை மற்றும் ஹப்புத்தளை பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு இவ்வாறு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.