Sangathy
AsiaNews

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்: உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்தது

Colombo (News 1st) ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4000-ஐ கடந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களால் 2000-க்கும் அதிகமான வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன.

இதுவரை கிடைத்த தரவுகளின்படி,  உயிரிழப்பு எண்ணிக்கை 4000-ஐ தாண்டியுள்ளதாகவும், சுமார் 20 கிராமங்களில் 1,980 முதல் 2,000 வீடுகள் முழுமையாக இடிந்து வீழ்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்கானிஸ்தானின் மேற்கு பகுதியில் உள்ள ஹெராத் மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை (07) காலை 11 மணி முதல் 12 மணி வரை அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டன.

இவை ரிக்டர் அலகில் 5.5, 5.9, 6.2, 6.3 என்று பதிவாகின. தொடர்ந்து பலமுறை நிலஅதிர்வுகளும் ஏற்பட்டன.

இதனால்,  ஹெராத் பகுதியில் 20 கிராமங்கள் முழுமையாக சிதைவடைந்தன. 10,000-ற்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்நிலையில், அங்கு தொடர்ந்தும் மீட்புப் பணிகளும் நிவாரணப் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

Related posts

NLC 2023: Chung invited in recognition of US support for BASL

Lincoln

President signs special condolence book

Lincoln

தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் தலைவராக விசேட வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம நியமனம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy