Sangathy
News

எல்லை தாண்டி மீன் பிடித்த 8 இலங்கை மீனவர்கள் இந்தியாவில் கைது

Colombo (News 1st) எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 8 இலங்கை மீனவர்கள், இந்தியாவில் நேற்று (23) கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இந்திய கடலோர காவல் படையினர் 8 மீனவர்களை கைது செய்துள்ளதுடன், 4 படகுகளையும் கைப்பற்றியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

கைது செய்யப்பட்ட மீனவர்கள்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் தாக்கப்படுகின்றமைக்கு எதிராக அனைத்து கட்சியினரும் ஒருங்கிணைந்து போராட முன்வர வேண்டும் என திராவிடர் கழகத் தலைவர்  கி.வீரமணி தெரிவித்துள்ளதாக Hindustan Times பத்திரிகை செய்தி வௌியிட்டுள்ளது.

மீனவர்கள் தாக்கப்படுவது கண்டிக்கத்தக்க விடயம் என தெரிவித்துள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டொக்டர் அன்புமணி ராமதாஸ், இலங்கைக்கு இந்தியா உதவி செய்து என்ன பயன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related posts

மூளைக்காய்ச்சல் ஆபத்துள்ள சிறைச்சாலைகளுக்கு நோயெதிர்ப்பு மருந்து

John David

‘I was not aware of Rajiv Gandhi assassination’, says Nalini

Lincoln

Proposed refinery at Hambantota: expressions of interest sought

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy