Sangathy
Sports

2023 ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில் இலங்கைக்கு 2 தங்கப் பதக்கங்கள்

Colombo (News 1st) இலங்கையின் நுவன் இந்திக்க கமகே, பிரதீப் சோமசிறி ஆகியோர் 2023 ஆசிய பரா விளையாட்டு போட்டிகளில்  தங்கப் பதக்கங்களை வென்றனர்.

ஆசிய பரா விளையாட்டு போட்டி சீனாவின் Guangzhou-வில் நடைபெறுகின்றது.

இன்று (24) நடைபெற்ற ஆடவருக்கான 100 மீட்டர் T44 பிரிவு ஓட்டப்போட்டியை இந்திக்க நுவன் கமகே 11.63 விநாடிகளில் கடந்தார்.

இது போட்டிச் சாதனையாக பதிவானது.

இதேவேளை, ஆடவருக்கான 1500 மீட்டர்  T46 பிரிவு ஓட்டப்போட்டியில் இலங்கையின் பிரதீப் சோமசிறி  தங்கப்பதக்கம் வென்றார்.

நான்கு நிமிடங்கள் 5.1 விநாடிகளில் அவர் போட்டித்தூரத்தை கடந்ததுடன், இதுவும் போட்டிச் சாதனையாக பதிவானது.

Related posts

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி அணி அபார வெற்றி..!

tharshi

New champions add spice to tennis singles events

Lincoln

Dravid still awaiting official confirmation of the extent of Bumrah’s injury

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy