Sangathy
News

வட மாகாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடல்

Colombo (News 1st) யாழ். நதி நீர் திட்டத்தின் ஊடாக வட மாகாண மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண்பது தொடர்பில் கலந்துரையாடப்படுவதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் தினகரன் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

யாழ். நதி நீர் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் பொறியியலாளர்கள் மற்றும் தொடர்புடைய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாரம்பரியத்திற்கு ஏற்ப பிரச்சினையை கையாள்வது தொடர்பிலும் பிரதமர் ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போதுள்ள 40,000 ஏரிகளை மேம்படுத்தவும் மழை நீரை சேமிக்கவும் கடலில் கலக்கும் நதி நீரை சேகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.

Related posts

Change in electronic interlocking system led to Odisha crash, rescue work over – Railway Minister

Lincoln

இதய அறுவை சிகிச்சைக்கான காத்திருப்பு பட்டியலில் 2,000 சிறுவர்கள்

Lincoln

இந்தியாவில் ஒரே நாளில் புதிதாக 339 பேருக்கு COVID-19 தொற்று

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy