Sangathy
News

எதிர்வரும் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை நீடிக்கும்

Colombo (News 1st) நிலவும் மழையுடனான வானிலை எதிர்வரும் சில தினங்களுக்கு மேலும் அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல், மத்திய, சப்ரகமுவ, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லிமீட்டர் வரையான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடுமென திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளையில் மழை பெய்யக்கூடுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடுமென்பதுடன், இதன்போது ஏற்படக்கூடிய அனர்த்தங்களை தவிர்த்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Related posts

GMOA accuses govt. of contemplating 15% pay cut for health workers

Lincoln

Jaffna MICE Expo 2023: Sri Lanka’s newest Business Tourism Destination

John David

FNO asks US ambassador not to interfere in SL’s internal affairs

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy