Sangathy
News

போலி விசாவில் கனடா செல்ல முயன்றவர் கைது

Colombo (Nes 1st) தட்டுப்பாடு இன்றி சீனியை விநியோகிப்பது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று(16) வர்த்தக அமைச்சில் இடம்பெறவுள்ளது.

வர்த்தக அமைச்சர் நளீன் பெர்னாண்டோ தலைமையில் இந்த கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலுக்கு சீனி இறக்குமதியாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சின் செயலாளர் ரஞ்சித் அத்தபத்து தெரிவித்தார்.

ஒன்றரை மாதங்களுக்கு தேவையான சீனி கையிருப்பு மொத்த விற்பனையாளர்களிடம் காணப்படுவதாக வர்த்தக அமைச்சு அனுமானித்துள்ளது.

நிர்ணய  விலைக்கு அதிகமாக சீனியை விற்பனை செய்பவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.

இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோகிராம் சீனிக்கான வரி, இந்த மாதம் முதலாம் திகதியிலிருந்து 50 ரூபாவாக அதிகரிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்ததையடுத்து சந்தையில் சீனிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து, ஏற்கனவே இறக்குமதி செய்யப்பட்ட சீனிக்கான விலை அதிகரிப்பை தடுக்கும் நடவடிக்கையாக விசேட வர்த்தமானியின் மூலம் சீனிக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்க நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி பொதி செய்யப்படாத ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் அதிகபட்ச சில்லறை விலை 275 ரூபாவாகவும் பொதி செய்யப்படாத சிவப்பு சீனி ஒரு கிலோகிராமின் விலை 330 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Related posts

SLTB Chairman won’t heed Transport Minister’s demand to quit

Lincoln

வெலிவேரியவில் துப்பாக்கிச்சூட்டில் இளைஞர் காயம்

Lincoln

Cabinet nod to provide land for victims of floods and landslide

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy