Sangathy
News

50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாயம் நிலவும் பகுதிகளாக அடையாளம்

Colombo (News 1st) நாடளாவிய ரீதியிலுள்ள 50 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாயம் நிலவும் பிரிவுகளாக பதிவாகியுள்ளன.

இந்த மாதத்தில் மாத்திரம் நாடளாவிய ரீதியில் 6,884 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. 

இந்த மாதத்தில் நாடளாவிய ரீதியில் 6,884 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளனர். 

இதற்கமைய, கொழும்பு மாவட்டத்தில் 15,953 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

கம்பஹா மாவட்டத்தில் 14,912 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 

களுத்துறை மாவட்டத்தில் 4672 நோயாளர்களும் கண்டி மாவட்டத்தில் 7482 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர். 
 
யாழ். மாவட்டத்தில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இரண்டு மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 2,321 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். 
 
இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 6,197 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

Nepal’s communist party seems headed for split; KP Oli, Prachanda talks fail to yield positive outcome

Lincoln

Poverty level will increase sharply in coming months – Ranawaka

Lincoln

Holy Easter Massacre

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy