Sangathy
News

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன் பிடித்த 25 இந்திய மீனவர்கள் கைது

Colombo (News 1st) Sea Of Sri Lanka எனும் இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 25 இந்திய மீனவர்கள் யாழ்.பருத்தித்துறை கடற்பிராந்தியத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மீனவர்களும் 02 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இன்று(10) அதிகாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கெப்டன் கயான் விக்ரமசூரிய தெரிவித்தார்.

இன்று காலை இந்திய மீனவர்கள் 25 பேரும் காங்சேன்துறை துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டதாகவும் கடற்படை பேச்சாளர் கூறினார்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மீனவர்கள் மயிலிட்டி கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.

நாகையிலிருந்து மீன்பிடிக்க வந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

வருடத்தின் இதுவரையாக காலப்பகுதியில் நாட்டின் கடல் எல்லையை மீறி மீன் பிடித்த குற்றச்சாட்டில் 33 இந்திய படகுகளுடன் 220 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

Related posts

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளின் விலைகள் குறைப்பு!

Lincoln

மின்சாரம், பெட்ரோலியம் உள்ளிட்ட பல சேவைகளை அத்தியாவசிய சேவைகளாக அறிவித்து அதிவிசேட வர்த்தமானி வௌியீடு

John David

Colombo bound train derails on Batticaloa line

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy