Sangathy
NewsTamil Nadu

வெள்ள பாதிப்பை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டது – மத்திய அரசு பாராட்டு

மிக்ஜம் புயல், மழை வெள்ள பாதிப்புகளை தமிழக அரசு மிகச் சிறப்பாக கையாண்டதாக மத்திய அரசின் குழு ஆய்வுக்கு பிறகு தெரிவித்துள்ளது.

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் ஆலோசகா் குணால் சத்யாா்த்தி தலைமையில் மத்தியக் குழுவினர், விமானம் மூலம் நேற்றிரவு (11) சென்னை வந்தடைந்தனர்.

இன்று காலை சென்னை தலைமைச் செயலகத்தில் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா, மத்தியக் குழுவினருடன் ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். வெள்ள பாதிப்புகள் குறித்து அவர் உள்ளிட்ட அதிகாரிகள் மத்தியக் குழுவினரிடம் எடுத்துரைத்தனர்.

இதையடுத்து, மத்தியக் குழுவினர் மிக்ஜம் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட சென்னை வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். மற்றொரு குழுவினர் வட சென்னை பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

ஆய்வுக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்தியக் குழுவினர் பேசுகையில், “மிக்ஜம் புயல், வெள்ள பாதிப்புகளை மிகச் சிறப்பாக கையாண்டதற்காக தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம். அதிக அளவிலான மழை பெய்ததால் தண்ணீர் தேங்கியது.

தமிழக அரசு தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்த போதிலும், எதிர்பாராத விதமாக புயல் சென்னை அருகே நீண்ட நேரம் மையம் கொண்டதால் பாதிப்பு அதிகமாகியுள்ளது.

கடந்த 2015-ஆம் ஆண்டை ஒப்பிடும்போது மிக விரைவாக இயல்பு நிலைக்கு சென்னை திரும்பியுள்ளது. அரசின் நடவடிக்கையால் உயிர்சேதம் மிகவும் குறைந்துள்ளது.

வெள்ள பாதிப்புகளில் இருந்து சென்னை மீண்டு வருவதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்” எனத் தெரிவித்தனர்.

Related posts

Indian taxpayers saved SL – AKD

Lincoln

தம்பலகாமம் வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ

Lincoln

சீன EXIM வங்கி – இலங்கை இடையிலான ஒப்பந்தம் Paris Club-இற்கு வழங்கப்பட்டுள்ளது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy