Sangathy
News

மட்டக்களப்பில் உள்ள முகாம்களை அகற்றுமாறு சாணக்கியன் எம்.பி. கோரிக்கை

மட்டக்களப்பிலுள்ள இராணுவ முகாங்களை அகற்றுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (12) உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சாணக்கியன் எம்.பி. அங்கு தொடர்ந்து பேசுகையில், ”பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களே, குருக்கள்மட இராணுவ முகாம் பற்றி நாம் மாவட்ட மட்டத்தில் கலந்துரையாடி அதில் ஓர் பகுதி அளவில் விட்டுத் தருவதாக உறுதி அளித்துள்ளார்கள். அதனை நீங்கள் துரிதப்படுத்தி தரவேண்டும் .

அதே போல் மட்டக்களப்பு மாவட்டத்தில் காயன்கேணி பிரதேசத்தில் புதிதாக ஓர் காணியினை இராணுவம் தன் வசப்படுத்தும் திட்டம் உள்ளதாக அறிந்தோம். அதே போல் பாலையடி வெட்டை இராணுவ முகாமில் ஓர் பகுதியை அவ் ஊர் மக்கள் மலசல கூடம் அமைப்பதக்காக கேட்கின்றார்கள்.

இவற்றினையும் கருத்தில் கொண்டு இவற்றுக்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். மட்டக்களப்பில் இவ்வாறாக பல காணிகள் காணப்படுகின்றன. இவற்றினை விடுவிக்க ஜனாதிபதியிடம் பல கோரிக்கைகள் முன்வைத்துள்ளேன் அவற்றை உங்களிடமும் முன்வைக்கின்றேன்.

நீங்கள் இராஜாங்க அமைச்சராக இருக்கும் காலப்பகுதிக்குள் இவ் காணிகளை மக்களுக்கு கையளிக்க கூடியதாக மற்றும் விடுவிக்க கூடிய வகையில் காணப்படும் என்பதனை உங்களிடம் நான் கோரிக்கையாக முன்வைக்கின்றேன்” என்றார்.

Related posts

25, 26 ஆம் திகதிகளில் மதுபானசாலைகளை மூட தீர்மானம்

John David

US has biggest coronavirus testing programme in the world: Trump

Lincoln

யுக்திய சுற்றிவளைப்பில் 24 மணித்தியாலங்களில் 1,182 பேர் கைது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy