Sangathy
News

மின்வெட்டு தொடர்பான முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை – பொது பயன்பாடுகள் ஆணைக்குழு

Colombo (News 1st) நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பிலான முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கப்பெறவில்லை என இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

குறித்த அறிக்கை எதிர்வரும் 20 ஆம் திகதிக்கு முன்னர் கிடைக்கப்பெறுமென எதிர்பார்ப்பதாக ஆணைக்குழுவின் தலைவர், பேராசிரியர் மஞ்சுல பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார்.

அறிக்கை கிடைக்கப்பெற்றதன் பின்னர், மின்சார சபையின் உயரதிகாரிகளை ஆணைக்குழு முன்னிலையில் அழைத்து காரணங்களைக் கேட்டறிய நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் கூறினார். 

இதனிடையே,  நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட மின்வெட்டு தொடர்பில் ஆராய வௌியகக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 

இது தவிர, மின்வெட்டு தொடர்பிலான விசாரணைகளுக்காக அரச புலனாய்வு சேவைப் பிரிவின் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார். 

கடந்த சனிக்கிழமை(09) மாலை 05.10 அளவில் நாடளாவிய ரீதியில் மின்வெட்டு ஏற்பட்டது.

சுமார் ஐந்தரை மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் மின்விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடிந்ததாக மின்சார சபை தெரிவித்துள்ளது. 

கொத்மலை – பியகம மின்விநியோக கட்டமைப்பில் மின்னல் தாக்கமே மின்வெட்டு ஏற்படக் காரணம் என மின்சார சபை பின்னர் தெரிவித்திருந்தது.

Related posts

மரக்கிளை முறிந்து வீழ்ந்ததில் சிறுமி உயிரிழப்பு

Lincoln

99x strengthens leadership team with key management additions and transitions

Lincoln

13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த இந்திய பிரதமர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: K.S. அழகிரி வலியுறுத்தல்

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy