Sangathy
News

இசை நிகழ்ச்சிகளை நடத்தி வசூலில் சாதனை படைத்த அமெரிக்க பாடகி

அமெரிக்காவின் பிரபல பாடகி டேலர் ஸ்விஃப்ட்  (Taylor Swift) இசை நிகழ்ச்சி நடத்தி, அதன் மூலம் கிடைக்கும் வசூலில் சாதனை படைத்துள்ளார். 

34 வயதான டேலர் ஸ்விஃப்ட் தனது 14 வயதில் இருந்தே பாடல்களை எழுதத் தொடங்கி உலகெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்களை தன்பால் ஈர்த்தவர். 

இவ்வாண்டின் மார்ச் மாதம் முதல் Eras Tour எனும் பெயரில் நீண்ட இசைச் சுற்றுப்பயணத்தில் டேலர் ஸ்விஃப்ட் ஈடுபட்டுள்ளார். 
  
இந்த சுற்றுப்பயணத்தில் தனது வாழ்நாளில் இதுவரை அவர் கடந்து வந்த இசை பயணத்தின் வெவ்வேறு காலகட்டத்தை (eras) நினைவுகூரும் விதமாக 44 பாடல்கள் கொண்ட 10 பகுதிகளாக பிரித்து நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

டேலர் ஸ்விஃப்டின் தீவிர ரசிகர்கள் தம்மை ஸ்விஃப்டீஸ் (Swifties) என அழைத்துக்கொள்கின்றனர். அவர்கள்  ஸ்விஃப்ட் செல்லும் இடங்களுக்கெல்லாம் சென்று அவரது இசை நிகழ்ச்சிகளை ரசித்து வருகின்றனர். 

ஒவ்வொரு இசை நிகழ்ச்சியையும் பார்க்க சுமார் 72,000 பேர் குவிகின்றனர். 238 டொலர்களுக்கு மேல் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டாலும், ரசிகர்கள் தயங்காமல் செல்வதால், ஒரு நிகழ்ச்சியில் மாத்திரம் 17 மில்லியன் டொலர்களுக்கு மேல் வசூல் குவிகிறது. 

கடந்த ஜூலை மாதம், அமெரிக்க மத்திய ரிசர்வ் வங்கி சார்பில் ஒவ்வொரு வருடமும் 8 முறை வெளியிடப்படும்  Beige Book எனப்படும் “சமகால பொருளாதார சூழல்” குறித்த அறிக்கையில் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு ஹோட்டல் அறைகளின் முன்பதிவு  Eras Tour நிகழ்ச்சியால் பன்மடங்கு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் புகழ்பெற்ற  Time பத்திரிகை, “2023 ஆண்டிற்கான நபர்” என டேலரை தெரிவு செய்து தனது அட்டைப்படத்தில் வெளியிட்டது.

டேலர், இதுவரை வசூலிலும், நிகழ்ச்சிகள் நடத்துவதிலும் 117 கின்னஸ் சாதனைகளை புரிந்துள்ளார்.

இந்நிலையில் அவரது  Eras Tour இசை நிகழ்ச்சி 1 பில்லியன் டொலர்களுக்கு மேல் வசூல் செய்து, புதிய உலக சாதனையை படைத்திருக்கிறது. 

அவரது சுற்றுப்பயணம் தொடர்வதால், இந்த வசூல் பல மடங்கு அதிகரிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

The Daddy of Trump

Lincoln

AFP’s Colombo photo chief wins international award

Lincoln

Australian HC launches professional cookery by VTA towards inclusive skills development in tourism

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy