Sangathy
News

குவைத்தின் அரச தலைவர் ஷேக் நவாஸ் அல்-அஹமட் அல்-ஜாபர் அல்-சபா காலமானார்

Colombo (News 1st) குவைத்தின் அரச தலைவர் ஷேக் நவாஸ் அல்-அஹமட் அல்-ஜாபர் அல்-சபா தமது 86 ஆவது வயதில் இன்று (16) காலமானார். 

குவைத்தின் அரச தொலைக்காட்சி மூலம் அமைச்சர் ஷேக் மொஹமட் அப்துல்லா அல்-சபா இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளார். 

மரணத்திற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை. 

எனினும், 40 நாட்கள் உத்தியோகபூர்வ துக்க காலத்தை அனுஷ்டிக்குமாறும் அரச துறைகளை மூன்று தினங்களுக்கு மூடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
குவைத்தின் பட்டத்து இளவரசர் ஷேக் மெஷால் அல்-அஹ்மட் அல்-ஜாபர் அல்-சபா (83) புதிய அரச தலைவராக பெயரிடப்பட்டுள்ளதாக அல்ஜஸீரா செய்தி வௌியிட்டுள்ளது. 

தனது ஒன்றுவிட்ட சகோதரர் ஷேக் சபா அல்-அஹ்மத் அல்-ஜாபர் அல்-சபாவின் மரணத்திற்கு பிறகு 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் அரச தலைவராக பொறுப்பேற்றமை குறிப்பிடத்தக்கது. 

Related posts

Students should be equipped with modern technology to take over the country by 2048 – President

Lincoln

RW tells MPs that “there are no short cuts to abolish executive presidency”

John David

SC to take up fundamental rights cases against attack on anti-govt. protesters

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy