Sangathy
NewsSrilanka

ஜனாதிபதி – வடக்கு, கிழக்கு தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்திப்பு

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் வடக்கு – கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சந்திப்பு நேற்று (21) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதன் போது நல்லிணக்கம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் சாதகமான பதில் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காணி, மீள் குடியமர்த்தல், நல்லிணக்கத்திற்கு அமைவாக சட்டத்தை நடைமுறைப்படுத்தல், தமிழக அகதி முகாம்களில் இருக்கும் இலங்கையரின் பிரச்சினைகள், வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பிலும் கலந்துரையாடல் இடம்பெற்றன .

இந்தச் சந்திப்பில் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன், பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சம்பந்தன், எஸ்.ராசமாணிக்கம், ஜீ.கருணாகரன்,டீ கலையரசன், குலசிங்கம் திலீபன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, பிரதமரின் செயலாளர் அனுர திசாநாயக்க, என பலரும் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts

Forced disappearances : Courts moved against Gotabaya again

Lincoln

SJB demands publication of MPs’ asset declarations

Lincoln

இந்த வருடத்தில் நாட்டை விட்டு வௌியேறிய 800 பல்கலைக்கழக பேராசிரியர்கள்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy