Sangathy
News

சவால்களின் உண்மைகளை அறிந்து பொறுப்புக்களை நிறைவேற்றுவோம் – ஜனாதிபதியின் நத்தார் வாழ்த்து

“வறியவர்களுடன் ஒரு வேளை உண்ணுங்கள்” என்ற விடயத்தை முன் நிறுத்தி, மாட்டு தொழுவத்தில் பிறந்த இயேசு கிறிஸ்துவைக் கொண்டாடும் நாம், ஒருபோதும் யதார்த்தத்தை மறக்க கூடாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நத்தார் தின வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில் “மானிடர்களைப் பாவங்களிலிருந்து விடுவிப்பதற்காக சிலுவையில் உயிர் தியாகம் செய்த இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூர்ந்து கிறிஸ்தவர்கள் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகின்றனர்.

தம்மை எதிர்ப்பவர்களையும், தமக்கு இடையூறு செய்வோரையும் மன்னித்து அவர்கள் மீதான கோபத்தையும், வெறுப்பையும் போக்கிக்கொள்ளுமாறு கிறிஸ்தவ மதம் நமக்கு கற்பிக்கிறது.

மேலும் பல்வேறு சவால்கள் நம்முன் நிற்கின்ற தருணத்தில், நாம் நத்தார் பண்டிகையைக் கொண்டாடுகின்றோம். நாட்டின் நமக்கிருக்கும் சவால்களின் உண்மைத் தன்மையை அறிந்துகொண்டு, பொறுப்புகளை நிறைவேற்றுவதற்காக அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்துடன் அனைவருக்கும் அன்பும், அமைதியும் நிறைந்த பண்டிகையாக அமையட்டும் என வாழ்த்துகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மிளகாய்களில் Aflatoxin; திருப்பி அனுப்ப நடவடிக்கை

John David

Erdogan declares Hagia Sophia a mosque after Turkish court ruling

Lincoln

உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை புறக்கணித்து நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்ற முடியாது: மனித உரிமைகள் ஆணைக்குழு சபாநாயகருக்கு அறிவிப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy