Sangathy
News

இயேசு கிறிஸ்துவின் பிறப்பை உணர்த்தும் நத்தார் பண்டிகை இன்று

Colombo (News 1st) அன்பை இவ்வுலகிற்கு எடுத்துரைத்த விண்ணுலக தேவன் இயேசு பாலகனின் பிறப்பை உலகளாவிய கிறிஸ்தவ மக்கள் இன்று(25) கொண்டாடுகின்றனர்.

உலக வாழ் கிறிஸ்தவர்கள் நள்ளிரவு முதல் நத்தார் விசேட ஆராதனைகளில் பங்குபற்றி வருகின்றனர்.

நத்தார் தின நள்ளிரவு ஆராதனைகள் கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் கொழும்பில் இடம்பெற்றது.

கட்டானை ஹல்பே சென் பிரான்சிஸ் சேவியர் தேவாலயத்தில் இந்த விசேட ஆராதனைகள் நடைபெற்றன.

யாழ்.புனித மரியன்னை தேவாலயத்தில் நத்தார் விசேட திருப்பலி நள்ளிரவு 12 மணிக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இயேசு பாலகனின் பிறப்பினை தொடர்ந்து யாழ்.மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் பேர்னாட் ஞானப்பிரகாசம் ஆண்டகையினால் நத்தார் விசேட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான கிறிஸ்மஸ் நள்ளிரவு ஆராதனை மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் கலாநிதி ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையில் ஒப்புக்கொடுக்கப்பட்டது.

புத்தளம் அன்னை புனித மரியாள் தேவாலயத்திலும் நள்ளிரவு ஆராதனைகள் இடம்பெற்றன.

Related posts

Poson celebrations at NDB with melodious Bhakthi Gee

Lincoln

Pakistan passenger train derails killing 30

Lincoln

கந்தக்காடு புனர்வாழ்வு நிலையத்தில் மீண்டும் மோதல்; 62 கைதிகள் கைது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy