Sangathy
News

முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க பிணையில் விடுவிப்பு

Colombo (News 1st) முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்கவிற்கு இரத்தினபுரி மேல் நீதிமன்றத்தினால் இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது. 

இரத்தினபுரி மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்னவினால் இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கஹவத்தை பகுதியில் 2015 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றுமொருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பான பொலிஸ் விசாரணைகளுக்கு அழுத்தம் விடுத்த குற்றச்சாட்டின் கீழ் லலித் ஜயசிங்க  விளக்கமறியலில் வைக்கப்பட்டார். 

இந்த குற்றம் தொடர்பில் அப்போதைய பிரதியமைச்சராக இருந்த பிரேமலால் ஜயசேகரவை கைது செய்ய தயாராகிய போது, அதனை தடுத்து பொலிஸாருக்கு அழுத்தம் விடுத்ததாக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் லலித் ஜயசிங்க மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 

Related posts

Lawyers Collective flays Tiran, Deshabandu

John David

Russia may start Phase III trial of coronavirus vaccine in mid-August: RIA

Lincoln

Govt. under fire for decision to postpone non-urgent surgeries

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy