Sangathy
News

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவை வலியுறுத்தல்

Colombo (News 1st) பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை உடனடியாக மீளப்பெறுமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது. 

இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அதீத கவனம் செலுத்தியுள்ளதாக, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகத்தின் ஊடகப்பேச்சாளர் Ravina Shamdasani அறிக்கையொன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளார். 

தற்போது காணப்படும் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக, இலங்கை அரசாங்கம் முன்வைத்துள்ள பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் தொடர்பில் அதிக கவனம் செலுத்தியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

பயங்கரவாத தடைச்சட்டத்தை இரத்து செய்வது இலங்கையின் உள்ளகப் பாதுகாப்பு தொடர்பிலான சிறந்த மறுசீரமைப்பின் ஓர் முயற்சியாக காணப்பட்டாலும், உத்தேச புதிய சட்டமூலம் ஊடாக கடந்த காலத்தில் இருந்து நிலவிய மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விடயங்கள் அவ்வாறே இடம்பெறும் அபாயம் காணப்படுவதாகவும் அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

உத்தேச சட்டத்தில் பயங்கரவாதத்திற்கான வரைவிலக்கணம், தடுப்புக்காவல் உத்தரவின் சட்டபூர்வ தன்மையை சவாலுக்குட்படுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

அத்துடன், தடுப்புக்காவல் இடங்களை பார்வையிடுவதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இருக்கின்ற வாய்ப்புகளை வரையறுக்கும் விடயமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

எனவே, சர்வதேச மனித உரிமை கொள்கைகளுக்கு ஏற்றாற்போன்று, உத்தேச பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை திருத்தியமைக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார். 
 

Related posts

சைபர் தாக்குதல் தொடர்பான விரிவான விசாரணை ஆரம்பம் – தொழில்நுட்ப அமைச்சு

Lincoln

காஸாவின் அல் ஷிபா மருத்துவமனைக்குள் நுழைந்து தேடுதல் வேட்டை நடத்திய இஸ்ரேல் இராணுவம்

John David

அனர்த்தங்களின் போது பயிர்ச்செய்கை பாதிப்புக்களை அறிக்கையிடுமாறு வடக்கு ஆளுநர் பணிப்பு!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy