Sangathy
News

விழா மண்டபங்களுக்கான முற்பதிவு கட்டணங்கள் 10% அதிகரிப்பு

Colombo (News 1st) நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், முற்பதிவுகளுக்கான கட்டணங்களை அதிகரிப்பதற்கு அகில இலங்கை விழா மண்டப மற்றும் உணவு விநியோகஸ்தர் சங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதற்கமைவாக, எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படும் முற்பதிவுகளுக்கான கட்டணத்தை 10 வீதத்தால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை விழா மண்டப மற்றும் உணவு விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவர் சாலிய ரவீந்திர தெரிவித்தார். 

தற்போது அனைத்து துறைகளின் பொருளாதார வளர்ச்சியும் 50 வீதத்தால் குறைவடைந்து செல்லும் நிலையே காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார். 

மரக்கறிகள் மாத்திரமின்றி அனைத்து உணவுப்பொருட்களின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளதால், நட்டத்தை ஈடு செய்ய முடியாத நிலைமையே  விழா மண்டப உரிமையாளர்களுக்கு உள்ளதாக அவர் கூறினார். 

திருமண மண்டபங்கள், விழாக்களுக்கான மண்டபங்கள் என்பனவற்றுக்கான உணவு விநியோகம் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை வழங்கும் தமது தொழில்சார் உறுப்பினர்கள் பாரிய பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளமையை கருத்திற்கொண்டு முற்பதிவுகளுக்கான கட்டணங்களை 10% அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டதாக சாலிய ரவீந்திர தெரிவித்தார். 

Related posts

Police disperse SJB protest in Nawalapitiya

Lincoln

UK, US urge Lanka to repeal PTA, decriminalise same-sex conduct

Lincoln

தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபைக்கு பதில் பிரதம நிறைவேற்று அதிகாரி நியமனம்

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy