Colombo (News 1st) பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட நான்கு சட்டமூலங்களில் கையொப்பமிட்டு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சான்றுப்படுத்தியுள்ளார்.
பாராளுமன்றம் இன்று கூடியபோது, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இதனை அறிவித்தார்.
தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்குமான அலுவலக சட்டமூலம், மத்தியஸ்த சபை திருத்தச் சட்டமூலம், அற்றோணித் தத்துவ திருத்தச் சட்டமூலம் மற்றும் மோசடிகளைத் தடுத்தல் திருத்தச் சட்டமூலம் ஆகியன சபாநாயகரினால் சான்றுப்படுத்தப்பட்டுள்ளன.
இதனையடுத்து, அவை நேற்று (23) முதல் சட்டங்களாக அமுலுக்கு வந்துள்ளதாக பாராளுமன்ற தொடர்பாடல் பிரிவு வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment.