Sangathy
Sports

IPL 2024 : ‘புது புள்ளிப் பட்டியல் இதுதான்’ – சிஎஸ்கே பிளே ஆப் உறுதி..!

ஐபிஎல் 17ஆவது சீசனில், சிஎஸ்கே பிளே ஆப் செல்ல வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது.

ஐபிஎல் 17ஆவது சீசனில், சிஎஸ்கே 5 போட்டிகளில் 3 வெற்றிகளை பெற்று, 4ஆவது இடத்தில் உள்ளது.

ஐபிஎல் 17ஆவது சீசனில், ஒவ்வொரு அணிக்கும் தலா 4 முதல் 5 போட்டிகள் நிறைவு பெற்றுள்ளது. இதில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4 போட்டிகளிலும் வென்று, வீழ்த்த முடியாத ஒரே அணியாக திகழ்கிறது.

முதலிடத்தில் ராஜஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் உள்ளது. அடுத்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் ஆகிய அணிகள் 4-ல் மூன்று வெற்றிகளையும், சிஎஸ்கே அணி 5-ல் மூன்று வெற்றிகளையும் பெற்று, 2, 3, 4 ஆகிய இடங்களில் உள்ளன.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், சிஎஸ்கேவை போல 5-ல் மூன்று வெற்றிகளை பெற்றுள்ளது. அடுத்து, பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைடன்ஸ் ஆகிய அணிகள் 5-ல் இரண்டு வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்று ஹைதராபாத்துக்கு அடுத்து 6, 7 ஆகிய இடங்களில் உள்ளன. மும்பை அணி 4-ல் ஒரு வெற்றியை பெற்று, 8ஆவது இடத்தில் உள்ளன.

கடைசி இரண்டு இடங்களில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகள் உள்ளன. இரு அணிகளும் 5 போட்டிகளில் ஒரேயொரு வெற்றியைப் பெற்று கவலைக்கிடமான நிலையில் உள்ளன.

சிஎஸ்கே அணி, 5 போட்டிகளில் 3-ல் வென்றுள்ளது. மூன்று வெற்றிகளும் ஹோம் கிரோண்டில்தான். சிஎஸ்கே தனது அடுத்தடுத்த லீக் ஆட்டங்களில் மும்பை, லக்னோ, லக்னோ, சன் ரைசர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ், குஜராத், ராஜஸ்தான், ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளது.

சிஎஸ்கேவன் அடுத்த 9 போட்டிகளில் 5 வெற்றிகளை பெற்றாக வேண்டும். சிஎஸ்கேவுக்கு கடும் சவால் அளிக்கக் கூடிய அணிகளாக மும்பை, ஆர்சிபி மட்டுமே இருக்கிறது. இரண்டு முறை லக்னோ, இரண்டு முறை பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு எதிராக விளையாட உள்ளனர். ஒரு போட்டியில் குஜராத் என இந்த 5 போட்டிகளிலும் சிஎஸ்கேவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கும்.

10 வெற்றிகளை பெற முடியும்..?

சிஎஸ்கே இதே பார்மில் விளையாடினால், அடுத்த 9 போட்டிகளில் 7 வெற்றிகளை பெற வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது. ஆக மொத்தம், சிஎஸ்கே இம்முறை 10 போட்டிகளில் வென்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. குறைந்தபட்சம், 8 போட்டிகளிலாவது சிஎஸ்கே வெல்லும் எனக் கருதப்படுகிறது.

பிளே ஆப் போட்டிகள் மே 21, 22 மற்றும் மே 24 ஆகிய திகதிகளில் நடைபெறும். முதலில் குவாலிபையர் 1, அடுத்து எலிமினேட்டர், அடுத்து குவாலிபையர் 2 ஆகிய ஆட்டங்கள் நடைபெறும். பைனல், மே 26 ஆம் திகதி நடைபெறும்.

Related posts

நீல வர்ணங்களின் மோதல் வெற்றி தோல்வியின்றி நிறைவு

John David

St. Joseph’s win All Island Schools U18 basketball title

Lincoln

Khawaja’s 14th Test ton makes it Australia’s day

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy